Sekar_Swiss SivaTravel Sekar_Swiss
Sekar_Swiss

இலங்கையர்கள் இருவர் தாய்லாந்தில் கைது

Admin: sifnas hamy | Published By: Arankam news| Date: 8:25 AM

கடத்தல் மற்றும் குடியேறிகளை சட்டவிரோதமாக அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் இரண்டு இலங்கையர்கள் தாய்லாந்து - பட்டாயாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 


ஹார்ஷ குமார (34) மற்றும் மதுர துஸார (26) ஆகியோர் கடந்த நவம்பர் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். 



கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி பட்டாயாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 20 வயதான இலங்கை பெண்ணொருவர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை தொடர்பாக தாய்லாந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 



இதன் அடிப்படையிலேயே இலங்கையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 



அவர்கள் மீது ஆட்கடத்தல், கடத்தல்கள், மோசடிகளை மேற்கொள்ளல் மற்றும் பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. 



இந்தநிலையில், தாம் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு செல்லவிருந்த தன்னை கடத்தி பட்டாயாவிற்கு கொண்டு சென்றதாக அந்த பெண் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 



குறித்த குற்றச்சாட்டுகளை சந்தேக நபர்கள் மறுத்துள்ள நிலையில், அவர்களின் வங்கி கணக்கு விபரங்களைக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பட்டாயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  • Share :

    முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு அரங்கம் நியுஸ் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்-அரங்கம் நியுஸ் இலங்கை நீங்களும் காணும் செய்திகளை உடன் அனுப்பி வையுங்கள் Arankamnews@gmail.com உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்துப்பெட்டியில் இடவும்
    8:25 AM
    | Views

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Labels

     

    Sign Up Arankam media Network

    © 2016 Web desgin All Rights Reserved
    |
    Call us on (+94) 77 90 73 696